பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

April 21, 2013
by prashanthan
0 comments

ஆரையூர் சித்திரைப் புதுவருடக் கொண்டாட்டம்

ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புதுவருட கலாசார விளையாட்டுக்கள் ஆரையம்பதி இ.கி.மி பாடசாலை மைதானத்தில் கழகத்தலைவர்
தட்சனாமூர்த்தியின் தலைமையில் நடத்தப்பட்டது இதில் அதிதிகளாக ஆரையம்பதி பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராசா முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் சிறைச்சாலைகள் மற்றும் நலன்புரிஅமைச்சின் சிவேஸ்ட ஆலோசகர் சி.சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Continue Reading →

April 20, 2013
by prashanthan
0 comments

ஆதாரமற்று கட்சியை தூற்றுவதை அனுமதிக்க முடியாது

20130421-120209 AM.jpgஅண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் விரும்பத்தகாத சம்பவங்களுக்கு எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் குறிப்பாக பொதுச் செயலாளராகிய என்னையும் சம்பந்தப்படுத்த சிலர் முனைவதும் அதனை திரிவுபடுத்தி பெரிதுபடுத்தி சில ஊடகங்கள் வெளியிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. எவர் குற்றம் புரிந்தாலும் அவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. நாடு பூராகவும் நிலைமை சீர்படுத்தப்பட்டு ஜனநாயக ரீதியாக நிருவாகம் நடைபெற்று வரும் வேளையில் அரச சிவில் நிருவாக பொலிஸ் படையினர் எங்கு குற்றச் செயல்கள் நடந்தாலும் துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகனை அடையாளப்படுத்தும் நிலையும் மேலோங்கிக் காணப்படுகின்றது குறிப்பிடத்தக்கது
ஆனால் மாறாக இன்றைய சூழ்நிலையில் குற்றங்களை மறைத்து குற்றவளிகளை தப்பிக்க வைப்பதனை நோக்கமாகக் கொண்டோ Continue Reading →

April 19, 2013
by prashanthan
0 comments

இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை

சவுதி அரேபியாவில் வேலை வாய்ப்பிற்காக சென்று நிர்க்கதியான நிலையில் உள்ள சுமார் 5000 இலங்கையர்களை மீளழைப்பதற்கோ அல்லது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கோ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் அவர்களினால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தவிசாளருக்கு எழுதியுள்ள அவசர மடலில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி கட்சியினால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் கீழ்வருமாறு;
சவுதி அரேபியாவில் பரிதவிக்கும் இலங்கையர்களை மீளழைப்பதற்கோ அல்லது வேலை வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்கோ வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் இலங்கை அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – த.வி.பு.கட்சி கோரிக்கை Continue Reading →

April 13, 2013
by prashanthan
0 comments

அன்புடன் வாழ்த்துகின்றேன்

அன்பின் உறவுகளே!
பிறக்கும் ‘விஜய’ தமிழ் சித்திரைப் புத்தாண்டு தரணி போற்றும் புகழ் சேர்க்கும் ஆண்டாக தங்களுக்கும் தங்களின் இனிய உறவுகளுக்கும் அமையும் ஆண்டாக திகழ எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி உண்மை அன்புடன் வாழ்த்துகின்றேன்.

20130413-093310 PM.jpg

April 9, 2013
by prashanthan
0 comments

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – ஆரையம்பதி

ஆரையம்பதி இராமக்கிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்ந இல்ல விளையாட்டுப் போட்டி 5 வருடங்களின் பின்பு ஆரையம்பதி இராமகிருஷ்ண மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் திருமதி.தங்கவடிவேல் தலைமையில் நடாத்தப்பட்டது. இராமகிருஷ்ணர், விவேகானந்தர், விபுலானந்தர் என 3 இல்லங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை; வெளிக்காட்டினர். இப் போட்டியில் 2013 ஆம் வருடத்திற்கான சம்பியனாக இராமகிருஷ்ணர் இல்லம் தெரிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுபாச்சக்கரவர்த்தி அவர்களும் கௌரவ அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ. பிரசாந்தன் மற்றும் கிராம மக்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

20130409-111623 PM.jpgContinue Reading →

April 9, 2013
by prashanthan
0 comments

ஆரையம்பதி – காத்தான்குடி எல்லைகள் பாதிப்பில்லாமல் வரையறுக்கப்படல் வேண்டும் ​​​​​​​​​

ஆரையம்பதி – காத்தான்குடி பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பாக வர்த்தமானியில் முறையாக குறிப்பிடப்பட்டு வரையறுக்கப்பட்டிருந்த போதும் இதுவரையும் நிருவாகங்கள் சீர்படுத்தப்படாமல் ஆரையம்பதி பிரதேச எல்லைக் கிராம நிருவாகங்களை காத்தான்குடி பிரதேச செயலகம் நிர்வகிக்க முற்படுவதும் அதனைத் தடுத்து நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளின் நிருவாக நடவடிக்கைகளை ஆரையம்பதி பிரதேச செயலகம், பிரதேச சபைகளிடம் நடைமுறைப்படுத்த வழங்கப்பட்டு வேன்டும் என கோரப் பட் டு வரும் நிலையில் ஆரையம்பதி – காத்தான்குடி எல்லையை மீள்நிர்ணயம் செய்ய முற்படுவதாகவும் இவ்வாறு மீள்நிர்ணயம் செய்யப்படும் போது ஆரையம்பதி பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர் எனவும் பூ.பிரசாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.சார்ள்ஸ் அவர்களுக்கும் கௌரவ.எம்.எல.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், கௌரவ. சி.சந்திரகாந்தன் அவர்களுக்கும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு எல்லைகளை நிர்வகிக்க கோரி இவரால் எழுதப்பட்டகடிதம்

20130409-080819 PM.jpg

April 9, 2013
by prashanthan
0 comments

வெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் அனுஷ்டிக்கப்பட்டுவரும் வெருகல் படுகொலை ஏபரல் 10 நினைவு நாள் ஏற்பாடுகள் நாளை கட்சித் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் வெருகல் மலை மக்கள் பூங்காவில் நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாணத்தின் விடிவுக்காக உயிர் நீத்த மறவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி வெருகல் வெருகலம்பதி ஆலயத்தில் நாளை விசேட அபிஷேக பூசையும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்று பிற்பகல் 4.30 மணி தொடக்கம் உயிர் நீத்தவர்களின் நினைவாக விசேட கூட்டமும் வெருகல் மலை மக்கள் பூங்காவில் நடைபெறவுள்ளது.

20130409-032645 PM.jpg

Continue Reading →

April 4, 2013
by prashanthan
0 comments

வெருகல் படுகொலை நாள் சித்திரை 10

20130404-114300 PM.jpg
கிழக்கு மாகாணத்தின் விடிவிற்காக உயிர் நித்த மறவர்களை நினைவு கூரும் நாளான சித்திரை 10 தினம் இம்முறையும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் வாகரைப் பிரதேச வெருகல் மலை மக்கள் பூங்காவில் மாலை 06.05 மணிக்கு பொதுத்தீபம் ஏற்றலுடன் நடைபெறவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாரும் முன்னாள் மாகான சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெருவித்தார்

April 4, 2013
by prashanthan
0 comments

மகளிர் சந்தை

கிரான் பிரதேச பிரிவுக்கு உட்பட்ட புலிபாய்ந்த கல் பிரதேசத்தில் நடத்தப்பட்ட இன் நிகழ்வில் கலந்த கொண்ட முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்கள் மக்களுடன் கலந்துரையாடியதுடன் மகளிரினால் உற்பத்தி செய்யப் பட்ட உற்பத்திப் பொருட்களையும் கொள்வனவு செய்தாh.;
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம் முன்னாள் மாகான சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அம்கோர் பணிப்பாளர் சுரேஸ் த.ம.வி.பு பொருலாளர் தேவராஜா உட்பட பலர் கலந்த சிறப்பித்தனர்
<
Continue Reading →

April 1, 2013
by prashanthan
0 comments

முட்டாள்கள் தினம் : ஏப்ரல் -1 முட்டாள் தினமாக உருவான கதை!

ஏப்ரல்-1… உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் கொண்டாடுகிறார்கள். உங்களை ஏதாவது சொல்லி ஏமாற்றப்பார்ப்பார்கள். சிலர் சொல்லும் டுபாக்கூர் தகவல்கள் 100 சதவீதம் அப்படியே உண்மை தான் என்று நம்பும்படி இருக்கும். எனவே நம்பி, ஏமாந்து விடாதீர்கள்.

சமீப காலமாக, இ-மெயில், எஸ்.எம்.எஸ். மற்றும் இணையத்தளங்கள் மூலமாகவும் ஏப்ரல் 1-ந் தேதி அன்று வதந்திகளை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆகையால் உஷாராக இருப்பது நல்லது. இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாத போதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.

16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல்-1 லேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13-வது கிரகரி பழைய ஜூலியன் ஆண்டுக்கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப் படுத்தினார்.

இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்த புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1582-ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டன.

ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.

அத்தோடு நில்லாமல், ஏப்ரல் -1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளை சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இது தான் காலப்போக்கில் ஏப்ரல் -1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைபிடித்ததாக வரலாறு கூறுகிறது.

1508-ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதே போல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. 1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.