கிராம மக்களின் தேவைகளை கேட்டறியும் விசேட கூட்டம் July 3, 2012 by prashanthan | 0 comments br /> மரப்பாலம், சின்னபுல்லுமலை ,கோப்பாவெளி மற்றும் இராஜாபுரம்; கிராம மக்களின் தேவைகளை கேட்டறியும் விசேட கூட்டம்இராஜபுரம் விஸ்ணு ஆலய முன்றலில் இடம்பெற்றது. கிராம தலைவர்களின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலே குறித்த கிராமங்களின் உடனடித் தேவைகள் ஆராயப்பட்துடன் அவர்களது அத்தியாவசிய தேவையாக வீடுகள் காணப்படுகின்றன. மற்றும் குடிநீர் பிரச்சினையும் முதன்மை பெறுகின்றன. குறித்த பிரச்சினைகள் முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தனிடம் தெரிவிக்கப்பட்டன. இதற்கான நடவடிக்கைகளை தான் உடன் மேற்கொள்வதாக உறுதியளித்தார். இந் நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின் பணிப்பாளர் க.மோகனும் கலந்து கொண்டார்.>