பூபாலபிள்ளை பிரசாந்தன்

கிழக்குமாகாணத்தில் இருந்து ஒரு தமிழனின் சிந்தனைகள்

விளையாட்டுத் துறையினை ஸ்திரப்படுத்துதல்

| 1 Comment

சர்வதேச ரீதியில் முக்கியத்துவமடைந்துவரும் விளையாட்டுத்துறையினை எமது மாகாணத்திலும் மேலும் வலுப்படுத்தும் நோக்குடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் விளையாட்டுத் துறையினை ஸ்திரப்படுத்தல் என்ற தனிநபர் பிரேரணையினை எதிர்வரும் 26.04.2011 நடைபெறவுள்ள மாகாண சபை அமர்வில் முன்வைக்கவுள்ளார்.

சர்வதேச ரீதியாக விளையாட்டுத்துறைக்கான முக்கியத்துவம் அதிகரித்துவரும் வேளையில் அதற்கு சவால் விடும் அளவிற்கு இலங்கையிலும் விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. தேசிய ரீதியில் விளையாட்டுத் துறைக்கென தனியான அமைச்சும், மாகாண ரீதியாகவும் விளையாட்டுத் துறைக்கு அமைச்சு நிறுவப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளிலும் விளையாட்டுத் துறைக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டு விளையாட்டுத் துறை வெற்றியீட்ட சான்றிதழ்களுக்கு நேர்முகத் தேர்வுகளின் போதும் புள்ளிகள் வழங்கப்படுகின்றது.

ஆனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் விளையாட்டுப் பிரவேசம் போதுமானதாக இல்லை என்பது அனைவரும் உணர்ந்த விடயம். வருடம் ஒரு முறை மாத்திரம் கொண்டாடப்பட்டு வரும் உற்சவங்களாக மாத்திரமே இவை காட்டப்படுகின்றது. இந் நிலையினை சீர்படுத்த பின்வரும் யுக்திகளை கையாள்வதற்கு மாகாணசபை பேரவை மூலம் ஆவணைகளை மேற்கொள்ளலாம் என அவரது தனிநபர் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது

  1. விளையாட்டு வீர, வீராங்கனைகளுக்கு பிரத்தியேக பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், மாகாண ரீதியில் முழு நேர பயிற்சியுடன் திறமை வெளிக்காட்டுபவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல்
  2. மாகாணத்திற்கென துறைசார் அணிகள் நிறுவுதலும், மாகாண விளையாட்டு கல்லூரி மூலம் நெறிப்படுத்தலும்
  3. பிரதேச மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கான கொடுப்பனவினை திட்டவட்டமாக வரையறுப்பதுடன், பிரதேச ரீதியான பயிற்சிகளை முகாம்களில் உறுதிப்படுத்தல்
  4. மாகாண ரீதியான விளையாட்டு அபிவிருத்திக் குழு கௌரவ.முதலமைச்சர், கௌரவ.தவிசாளர், கௌரவ.அமைச்சர்கள் அடங்கலாக அமைப்பதுடன், மாவட்ட ரீதியான விளையாட்டு முறைப்பாடுகளையும், விளையாட்டு கழகங்களின் ஆதங்கங்களையும் கேட்டறிதலுடன், நிவாரணம் கொடுத்து இணைப்பாக்கத்தினை மேற்கொள்ளுதல்
  5. அரசியல் தலைமைகள் விளையாட்டுக் கழகங்களுக்கும், விளையாட்டு அபிவிருத்திக்கும் நிதி வழங்கும் போதும், மைதானம் வழங்கும் போதும் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு விளையாட்டு உத்தியோகஸ்தர்கள் ஊடாக வழங்குதல். அக் கழகங்கள் பதிவு செய்யப்படாது இருப்பின் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல்

One Comment

  1. சிறந்த ஒரு புது முயற்சி வெற்றி பெற எனது நல் வாழ்த்துகள். மேலும் அனைத்து certificates களை English இல் எழுதும் படி கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Required fields are marked *.

*


  (To Type in English, deselect the checkbox. Read more here)